சித்ராவின் தற்கொலையில் தோண்ட தோண்ட வெளியாகும் மர்மங்கள்.!

vj chitra

பிரபல விஜே சித்ரா அவர்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்  ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்.இவர் இறந்து ஒரு ஆண்டு காலம் கடந்துவிட்ட நிலையில் இவரது மறைவிற்கு என்ன காரணம் என்று இதுவரைக்கும் தெரியவில்லை.

இதன் தொடர்பாக சித்ராவின் கணவர் ஹெமநாத் அவர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் சிறையில் இருந்தார் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.இந்த நிலையில் ஹெமநாத் அவர்கள் சித்ரா மரணத்திற்கு காரணமானவர்களால் என்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக கமிஷனர் அலுவகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதனால் மீண்டும் சித்தர வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இவரை குறித்து சித்ராவின் அம்மா  அவர்கள் இணையதளம் ஒன்றில் பேட்டியளித்துள்ளார்.அதில் ஹெமநாத் சொல்வதை 2வது வருடத்திற்கு முன்பே சொல்ல வேண்டியதுதானே.இதற்கும் எம் எல் ஏவுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற முன்பே சொல்லியிருந்தால் இரண்டு குடும்பத்தினர்களின் சேர்ந்து போலீசில் புகார் கொடுத்திருக்கலாமே.

இரண்டு வருடம் அமைதியாக இருந்துவிட்டு இப்ப ஏன் வந்து சொல்ல வேண்டும். அப்பப்போ 2 வருஷமா நீ போதையில இருந்தியா இப்போதான் தெளிஞ்சுதா? என்று கூறியுள்ளார். மேலும் ஹெமநாத் அவர்களால் எங்கு உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எங்கள் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை  அவர்கள் கொலை செய்திருக்கிறார்கள் தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கணும்.

vj chitra
vj chitra

எங்களுக்கு பயமாக இருக்கிறது. நான் கடைக்கு சென்றபோது இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் நாக்கை கடித்து கொன்றுவிடுவேன் என்று விரல்களை காட்டி விட்டு சென்றார். இதனால் எங்களுக்கு பயம் வந்துவிட்டது. பின்னர் போலீசிடம் புகார் கொடுக்க சென்றோம் ஆனால் போலீஸ் எங்களை பலமுறை அலைய விட்டார்கள். பிறகு ஒரு போலீஸ்  கேமராவில்  பார்த்தார்கள்.

மேலும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட உடல்  இப்படியா இருக்கும் யார் அந்த மருத்துவர் உடலை சரியாக பரிசோதனை செய்யவில்லை. என சித்ராவின் அம்மா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.