விஜயின் “வாரிசு” படத்தில் இணைந்த மற்றொரு இயக்குனர்.! யாருப்பா அது.?

vijay
vijay

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளவர். அதனால் விஜயின் படம் வெளி வருகிறது என்றால் அவரது ரசிகர்கள் அதனை ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டாடுவார்கள். அப்படி விஜயும் வருடத்திற்கு ஒரு தரமான படத்தை கொடுத்து வருகிறார்.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தை தொடர்ந்து தற்போது தனது 66 வது படமான வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகின்ற நிலையில் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் செட் அமைக்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகின்றன.

மேலும் வாரிசு படத்தின் சூட்டிங் புகைப்படங்கள் கூட சில சமூக வலைதளங்களில் கசிந்தது. இந்த படத்தில் விஜய் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, பிரபு, குஷ்பூ, ஜெயசுதா, சங்கீதா, ஷியாம், பிரகாஷ்ராஜ் போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே வெளியாகும் என்பதால் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் இணைய உள்ள மற்றொரு பிரபலம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இயக்குனர் நடிகர் வில்லன் போன்ற பன்முகத்தன்மை கொண்ட எஸ் ஜே சூர்யா வாரிசு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் கூடிய விரைவிலேயே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படத்தை எஸ் ஜே சூர்யா இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதைத்தொடர்ந்து விஜய் உடன் இணைந்து மெர்சல் நண்பன் போன்ற படங்களில் நடித்தும் உள்ளார் எஸ் ஜே சூர்யா.

sj surya and vijay
sj surya and vijay