தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் இருந்து தற்போது நடிகை ஒருவர் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீப காலங்களாக வெள்ளித்திரையில் பிரபலமடைந்த ஏராளமான நட்சத்திரங்கள் சின்னத்திரையில் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் அது போன்ற நடிகர் நடிகைகளுக்கும் சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலிலும் சுஜிதா, ஸ்டாலின் போன்றவர்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு இந்த சீரியல் இந்த அளவிற்கு பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் முல்லை-கதிர் இவர்களுடைய கெமிஸ்ட்ரி தான். மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் ஏராளமான பிரபலங்கள் மாற்றப்பட்டு இருக்கும் நிலையில் இந்த சீரியலின் மூலம் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் காவியா.
இவர் தற்பொழுது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததால் சின்னத்திரையில் இருந்து விலகி வெள்ளித்திரையில் நடித்த வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் நடிகை ஒருவர் மாற வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நடிகை சாய் காயத்திரி தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும் இவர் இதற்கு முன்பாக பல சீரியல்களின் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இவருக்கு தான் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது எனவே காயத்ரி அதை சீக்ரெட்டாக வைத்துள்ள நிலையில் அவர் நடித்து முடித்துள்ள படத்தின் டப்பிங் பணிகளின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு விஷயத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.