சினிமாவுலகில் புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது சினிமா உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே அவர்கள் தனது திறமையை டிக் டாக் போன்றவற்றில் தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து ஒருகட்டத்தில் சினிமா பிரபலங்களை வெகுவாக கவர்ந்து பட வாய்ப்பை அளிக்கின்றன.
அந்த வகையில் பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமா உலகில் வெற்றி கொடியை நாட்டி உள்ளனர். அவர்களில் ஒருவராக தற்பொழுது டிக்டாக்கில் தனது உங்கள் திறமையையும், அழகையும் காட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் டிக் டாக் இலக்கியா. இலக்கியாவுக்கு இளம் வயது தான் ஆனால் டிக்டாக்கில் இவர் தம் எதிர்பார்க்காத அளவிற்கு கிளாமர் மற்றும் பாடல்களுக்கு நடனமாடி இளசுகள் மத்தியில் தற்போதுபேமஸ் ஆகி உள்ளார்.
இலக்கியா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நீ சுடத்தான் வந்தியா இப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ், திரில்லர் படமாக உருவாகி உள்ளது இந்த திரைப்படத்தை கே துரைராஜ் இயக்கியிருக்கிறார் ஆல்பின் மீடியா தயாரித்து உள்ளது. இந்த படத்தில் இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண் குமார் நடித்துள்ளார்.
இந்தப் படம் சற்று கிளாமரான படம் என்பதால் சென்சாரில் சிக்கி தவித்த நிலையில் ஒருவழியாக சென்சாரில் இருந்து இந்த படம் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் கே துரைராஜ் இது ஒரு காதல் சென்டிமெண்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது.
இந்த படத்தை மிகப்பெரிய ஒரு படம் என்று சொல்லலாம் முழுநீள வணிக படத்துக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ற படபிடிப்பு உபகரணங்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்தினோம் இந்த மாதம் டிசம்பர் 31 இறுதியில் படம் திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ரசிகர்களுக்கு விருந்தாக நிச்சயம் இந்த திரைப்படம் இருக்கும் என்றார்.