‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது தெரியுமா.? வெளிவந்த அப்டேட்டால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

ak-62
ak-62

நடிகர் அஜித்தின் 62வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருந்து வருகிறார்கள். அதாவது நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இப்படிப்பட்ட நிலையில் விக்னேஷ் சிவன் எழுதிய கதை அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இவ்வாறு விக்னேஷ் சிவன் தற்பொழுது அஜித்திற்காக எழுதிய கதையில் வேறு நடிகரை நடிக்க வைக்க முடிவு செய்த நிலையில் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் இதுவரையிலும் அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அதாவது மகிழ் திருமேனி கூறிய கதை அஜித் மற்றும் லைகா நிறுவனத்திற்கு பிடித்து போக அவரை ஏகே 62 படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

எனவே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் அஜித்தின் தந்தை சமீபத்தில் இறந்ததால் ஏகே 62 படத்தின் அறிவிப்பு தாமதமாகும் என கூறப்பட்டது இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவலின் படி அடுத்த வாரம் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை லைக்கா நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் மேலும் இந்த படத்தின் டைட்டிலையும் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து வரும் மே மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து தேர்வு முடிந்து விட்டதாகவும் அவர்கள் பற்றிய தகவலும் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருப்பது எனவே ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.