சில நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்துவந்தன அந்த வகையில் தற்போது திறக்கப்பட்ட உடன் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மற்ற திரைப்படங்கள் இணையத்தில் வெளியாகிவிட்டன.
அந்த வகையில் இந்த ஆண்டு தியேட்டரில் வெளிவந்து நல்ல வசூலைப் பெற்ற திரைப்படம் என்றால் அது தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ஆகிய இரண்டையும் எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
இதனைத் தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி தியேட்டரில் வெளிவர காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் அண்ணாத்த இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா அவர்கள் தான் இயக்கிய உள்ளார். இவ்வாறு இந்த திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் டீஸர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள். அந்தவகையில் இந்த திரைப்படத்தின் வியாபாரத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமானது ஆரம்பித்துவிட்டது.
அந்த வகையில் அண்ணாத்த திரைப்படம் பெருமளவு அமெரிக்காவில் நல்ல வரவேற்பை பெற்று வரும் அந்த வகையில் அமெரிக்காவில் ரஜினியின் அண்ணாமலை திரைப்படத்தில் டிக்கெட்டின் விலை சுமார் 20 டாலர் உயர்த்தி உள்ளார்களாம். இதனை நம் இந்திய மதிப்பிற்க்கு பார்த்தால் ஆயிரத்தி நானூறு ரூபாய்.
பொதுவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படம் வெளி வந்தால் அவருடைய திரைப்படத்தின் முதல் நாள் காட்சி டிக்கெட் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கப்படும் அந்த வகையில் இந்த திரைப்படத்திற்கு அதற்கு மேலே டிக்கெட் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ரஜினி திரைப்படம் வெளிவரும் போதெல்லாம் இது போன்ற சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது இதனை எப்போது தான் அரசாங்கம் தட்டிக்கேட்கும் என்பது தெரியவில்லை.