தெலுங்கு சினிமாவில் பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் சிவா. சமீபகாலமாக தமிழ் சினிமா பக்கம் அடியெடுத்து வைத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் முதலில் நடிகர் கார்த்தியை வைத்து “சிறுத்தை” என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த தொடர்ந்து அஜித்துடன் கைகோர்க்கும் தொடர்ந்து நான்கு படங்களை சிறுத்தை சிவா கொடுத்த காரணத்தினால் அவரது மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்தது.
அதன் காரணமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்க்கும் வாய்ப்பை பெற்றார். ஒருவழியாக ரஜினியும் சிவாவும் இணைந்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் பணியாற்றினார் இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து கதை என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகம் இருந்தன.
மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்பதால் தமிழில் பெரும்பாலான திரையரங்குகளை அண்ணாத்த படத்தை வெளியிட வைத்தது. தமிழ் நாட்டையும் தாண்டி வெளிநாட்டிலும் 1200 க்கும் மேற்பட்ட திரையரங்குகளை கைப்பற்றி புதிய சாதனை படைத்தது ரஜினியின் அண்ணாத்த. படத்தின் எதிர்பார்ப்பு நன்றாக இருந்தது.
நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தினாலும், சொல்லும் கொள்ளும்படி நல்ல விமர்சனத்தை பெறவில்லை என கூறப்படுகிறது வழக்கம்போல அரைத்த மாவையே இந்த படத்திலும் சிவாஅரைத்துள்ளதாக ரசிகர்கள் பலரும் கூறுகின்றனர் அதனால் இந்த படத்திற்கான வரவேற்பு வருகின்ற நாட்களில் குறையும் என ஒரு தரப்பு இரசிகர்கள் மறைமுகமாக சொல்லுகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் சிறுத்தை சிவா சூர்யாவுடன் வெகுவிரைவிலேயே கைகோர்க்க போகிறார் என்ற தகவல்கள் சமீப காலமாக இருந்து வருகின்றன தற்போது இந்த படம் விமர்சனம் பெறாததால் சூர்யா ரசிகர்கள் சிறுத்தை சிவாவுடன் நீங்கள் அடுத்ததாக படத்தில் இணைய வேண்டாம் என கூறி வருகின்றனர் ஏனென்றால் இதுபோன்ற ஒரு படமே உங்களுக்கு கிடைத்து விட்டால் அது சரி வராது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தற்போது வேண்டாம் என கூறி வருகின்றனர்.