வயதானாலும் கூட ஸ்டைலும் நடிப்பு திறமையும் கொஞ்சம் கூட குறையாமல் இளம் வயதில் எப்படி நடித்தாரோ அதே அளவிற்கு வயதான பிறகும் மிகவும் சிறப்பாக தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இளம் முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் தற்பொழுது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாராவும் இவரின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ரஜினிகாந்துக்கு முறை பெண்களாக குஷ்பு, மீனா உள்ளிட்ட இன்னும் பல திரைப்பிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இத்திரைப்படத்தின் சூட்டின் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இத்திரைப்படம் சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது கொரோனா தோற்று ஐந்து பேருக்கு உறுதியானதால் மீண்டும் அப்படி ஆகி விடக் கூடாது என்று கொரோனா பாதுகாப்புடன் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தில் கொடூர வில்லனாக நடித்து வரும் ஜகபதி பாபு அண்ணாத்த திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது இவர் ட்வீட் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் இவர் நடித்து வரும் கதாபாத்திரம் பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கும் என்றும் அரவிந்த சமேதா படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தை முறியடிக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
அந்தவகையில் அந்த வில்லன் கேரக்டரில் போடும் உடைகள் போன்றவற்றை வீடியோவாக தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.