ஊஞ்சலில் ரஜினியுடன் நயன்தாரா புதிய போஸ்டருடன் வைரலாகும் அடுத்த அப்டேட்.!

annaththa

ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா  நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நடந்து முடிந்த நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்ட் புரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாராவை தொடர்ந்து குஷ்பு, மீனா போன்ற 80 முன்னணி நடிகைகள் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

அதோடு முதன்முறையாக  கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்திற்கு தங்கை வேடத்தில் நடிக்கிறார் என்பதும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் சமீபத்தில் எஸ்.பி.பி கடைசியாக பாடிய முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பெரிய அளவில் வைரலானது.

இந்தப் பாடலைத் தொடர்ந்து அண்ணாத்த திரைப்படத்தின் இரண்டாவது பாடலை நாளை மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடியுள்ளார்கள்.

சாரகாற்றே  என ஆரம்பிக்கும் இந்தப் பாடலை ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா இருவரும் பாடுவது போல படப்பிடிப்பு அமைந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்த பாடலின் ஸ்டிலில் உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது.