வசூலில் விஜய் படத்தை முந்த முடியமால் தட்டி தடுமாறிய அண்ணாத்த – அதுவும் எங்க தெரியுமா.?

rajini-and-vijay-
rajini-and-vijay-

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை பல தரப்பட்ட படங்களில் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது இவரின் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை ருசித்து உள்ளன அதற்கு முக்கிய காரணம் இவரது ஸ்டைல், நடிப்பு மற்றும் காமெடியன்கள் இல்லாவிட்டாலும் ரஜினியே காமெடி செய்து அசத்துவது வழக்கம்.

அதனாலேயே ரஜினியின் பெரும்பாலான படங்கள் ஹிட் உள்ளன. அந்த காரணத்தினாலேயே ரஜினியின் படத்தை ரசிகர்களையும் தாண்டி குடும்பம் குடும்பமாக இவரது திரைப்படத்தை கண்டு மகிழ்கின்றன. மேலும் இவரது படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன. இந்த நிலையில் சிவாவுடன் கைகோர்த்து “அண்ணாத்த” திரைப்படத்தில் நடித்து உள்ளார்.

அண்ணாத்த படம் நேற்று கோலாகலமாக தீபாவளியை முன்னிட்டு வெளியானது. ஏற்கனவே படத்தை ரஜினி மற்றும் அவரது குடும்பங்கள் பலர் பார்த்து அசந்து போன நிலையில் தற்போது ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது ஓரளவு கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மட்டும் பட்டையை கிளப்பி வருகிறது.

டிக்கெட் புக்கிங் மட்டுமே சுமார் 20 கோடிக்கு மேல் அள்ளிய நிலையில் தற்போது தமிழகத்தில் மட்டுமே அண்ணாத்த திரைப்படம் வசூலில் 34.92 கோடியை கைப்பற்றியது. உலகம் முழுவதும் 70 கோடிக்கு மேல அள்ளி புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது அண்ணாத்த திரைப்படம். வசூல் வேட்டை நடத்தி வருகிறது இப்படி வருவதோடு மட்டுமல்லாமல் பல டாப் நடிகர்கள் வசூலையும் ஓவர்டேக் செய்து அசத்தி வருகிறது. ரஜினியின் ஒவ்வொரு திரைப்படங்களும் புதிய சாதனை படைப்பது வழக்கமாக வைத்திருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் வசூலில் தற்போது விஜய்யின் சர்க்கார் திரைப்படத்தை மட்டும் முந்த வில்லை என கூறப்படுகிறது தெலுங்கில் முதல் நாளில் சர்க்கார் திரைப்படம் 9 கோடி அள்ளி உள்ளதாம் ஆனால் அண்ணாத்த திரைப்படம் முதல் நாளில் இதுவரை 3 கோடிக்கு மேல் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.