நடிகை நயன்தாரா கிழந்த பேண்டுடன் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு மிகவும் ஸ்டைலாக நடந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்றிலிருந்து இன்று வரை முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாக வலம் வருகிறார் இவரின் 70 தா வது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் அவருடைய ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் மீனா குஷ்பு கீர்த்தி சுரேஷ் நயன்தாரா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது ஆனால் கொரனோ பரவல் அதிகமானதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரை உலகம் இயங்க ஆரம்பித்தாலும் முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் படப்பிடிப்பில் பங்கேற்க பலரும் தயக்கம் காட்டி வருகிறார்கள். அதனால் அண்ணாத்த படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு டிசம்பர் 15ஆம் தேதி முதல் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது, அதற்கு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் படத்திற்கு செட் அமைக்கும் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் சென்னையில் இருந்து தனி விமானத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெள்ளை நிற ஜிப்பாவில் முக கவசத்துடன் சும்மா ஸ்டைலாக புறப்பட்டு சென்ற புகைப்படம் வெளியாகி வைரல் ஆன நிலையில். அதேபோல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் தனி விமானத்தின் மூலமாக ஐதராபாத் சென்றடைந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் கிழிந்த பேண்ட் மற்றும் கிழிந்த ஜீன்ஸ் சட்டையுடன் மிகவும் ஸ்டைலாக நடந்து செல்கிறார் இதற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டு வருகிறார்கள். திரைப்படத்தில் நயன்தாரா முதன் முதலாக வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன அதேபோல் ரஜினி தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.