சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் 40 வருடங்களுக்கு மேலாக இருந்தாலும் தொடர்ந்து இப்பொழுதும் படங்களில் நடித்து தனது இடத்தை விட்டுக் கொடுக்காமல் வைத்திருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.அதற்கு முன்பே தற்போது படத்தின் டிக்கெட் வெளியாகி உள்ளது ரசிகர்களும் முட்டி மோதிக்கொண்டு படத்தின் டிக்கெட்டை வாங்கி வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் அண்ணாத்த திரைப்படம் பிசினஸில் வெற்றி பெற்றதா தோல்வியடைந்ததா என்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 182 கோடியாம். ரஜினியின் சம்பளம் மட்டுமே 100 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு தமிழில் தாண்டி மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த அளவிற்கு தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் இந்த படம் அமோக வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படம் எவ்வளவு இதுவரை எவ்வளவு காசு பார்த்து உள்ளது பற்றி நாம் பார்க்க உள்ளோம். தமிழக தியேட்டர்களின் மூலம் சுமார் 55 கோடி ஷேர் கிடைக்கும் என தெரியவருகிறது. மேலும் கேரளாவில் 3 கோடி, கர்நாடகாவில் 4.50 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 12 கோடி ஷேர் கிடைக்கும் என தெரிய வருகிறது. வட இந்திய திரை அரங்கில் 1 கோடியும் ஓவர்சேஸ் இடங்களில் 15 கோடியும் ஷேர் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்லைட் ரைட் மட்டும் 50 கோடி டிஜிட்டல் ரைட்ஸ் 45 கோடி ஆடியோ 2 கோடி என பல்வேறு பகுதிகளில் இருந்து பணம் வருகிறது. இசையே மூன்று காட்சிகளை மட்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் விற்காமல் தன் வசப்படுத்தியுள்ளது. படத்தின் பட்ஜெட்டும் மொத்தம் 182 கோடி பார்த்தால் கலெக்ஷன் 182 தெரிய வருகிறது இதன் மூலம் 5 கோடி தான் அதிகம் லாபம் பார்த்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் படம் வெளிவருவதற்கு முன்பாக 5 கோடி என்பது பெரிய விஷயம் தான் ஆனால் ஒரு சிலரோ ரஜினி லெவலுக்கு இது கம்மி என்று கூறுகின்றனர். நிச்சயம் படம் வெளிவந்த பிறகு மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என்பதால் இன்னும் பல கோடிகளை இந்த திரைப்படம் ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது.