அண்ணாத்த படம் : தமிழகத்தில் மட்டும் முதல் நாள் புக்கிங்கில் இதுவரை எவ்வளவு கோடி அள்ளியுள்ளது தெரியுமா.? வெளியான ரிப்போர்ட்.?

annathaa
annathaa

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த திரைப்படத்தை சீரும் சிறப்புமாக சிறுத்தை சிவா எடுத்து முடித்துள்ளார். இவர் கிராமத்து கதைகள் உள்ள படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அஜித்தை வைத்து இவர் வீரம், வேதாளம், விசுவாசம் ஆகிய படங்களை கொடுத்த நிலையில் தற்போது முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து இந்த படத்தை கொடுத்துள்ளார். இந்த படம் நாளை தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படம் கிராமத்திலிருந்து மக்கள் நடமாடும் நகரம் பக்கம் நகர்கிறது கிட்டதட்ட விஸ்வாசம் திரைப்படம் போல இந்த படமும் இருந்தாலும் ரஜினியின் ஸ்டைல் வேற என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.  ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி போன்ற டாப் நட்சத்திர பிரபலங்கள் இறங்கி உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

சமீபத்தில் கூட இந்த படத்தை ரஜினியின் குடும்பங்கள் அனைவரும் பார்த்து கொண்டாடிய நிலையில் நாளை வெளிவர இருப்பதால் புக்கிங் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தொடங்கியது. அண்ணாத்த திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே புக்கிங் சுமார் 10 கோடி.

அண்ணாத்த திரைப்படம் முதல் நாள் மட்டுமே சுமார் 20 கோடி வசூலிக்கும் என கூறப்படுகிறது. பார்ப்போம் ரஜினியின் லெவலுக்கு 20 கோடியை தாண்டினாலும் தாண்டலாம்  எனவும் கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் மனசு வைத்தால் அதையும் தாண்டியும் இந்த படம் வசூலை ஈட்ட அதிகம் வாய்ப்புள்ளது .