Bigg Boss 7: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. விரைவில் பிக் lபாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் துவங்க இருக்கிறது எனவே இதற்காக போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தில் நடித்த நடிகை கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில் 6 சீசன்களையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கிய வருகிறார். அந்த வகையில் 7வது சீசனையும் கமலஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.
அந்த வகையில் விரைவில் பிக்பாஸ் சீசன் 7நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. எனவே இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த சில தகவல்கள் அடிக்கடி சோசியல் மீடியாவில் வைரல் ஆகுவது வழக்கமாக இருந்து வருகிறது. அப்படி பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தில் பார்வை தெரியாத டீச்சராக நடித்திருந்த நடிகை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பொதுவாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிலர் மட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களுடன் பிரபலமடைவது வழக்கம் அப்படி பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்த நடிகையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து பிரபலமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவா மனசுல சக்தி படத்தினை இயக்கிய ராஜேஷின் இரண்டாவது படமாக பாஸ் என்ற பாஸ்கரன் படம் உருவானது.
அந்த வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் ஆர்யா, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். அப்படி இந்த படத்தில் கண்ணு தெரியாத ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை அன்னபூரணி.
நடிகை அன்னபூரணி சன் டிவி, வசந்த் டிவி, விஜய் டிவி, கே டிவி என பல சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அன்னபூரணி ராமானுஜர் தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் இதனை அடுத்து மாமா பிள்ளை, பாசமலர், சொந்த பந்தம், மோகினி, தேவதை என பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.