இசை வெளியீட்டு விழாவிற்கு செய்த செலவை விட நடிகைகளுக்காக அதிகம் செலவு செய்த அண்ணாச்சி.! முழு விவரம் இதோ.

actress
actress

சினிமாவுலகில் புதுமுக நடிகரின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது தற்போது கூட சரவணா ஸ்டோர்ஸ்  நிறுவனத்தின் உரிமையாளர் அண்ணாச்சி கூட ஹீரோவாக தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் படம் விரைவில் வெளியாக இருக்கிறது இந்த படத்தில் ஊர்வசி ரவுதேலா, பிரபு, விவேக், நாசர் இன்னும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர்.

படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது இதில் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி என்ட்ரன்ஸ் கொடுக்க அவருடன் பல டாப் நடிகைகள் பலர் அருகில் வந்தனர்.  ஒரு அறிமுக ஹீரோவுக்கு இவ்வளவு டாப் நடிகைகள் வந்தது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது இதில் குறிப்பாக தமன்னா, பூஜா ஹெக்டே, ஹன்சிகா லட்சுமிராய் உள்பட பல பிரபலங்கள் தொடங்கி இளம் நடிகைகள் வரை கலந்து கொண்டனர்.

படத்தின் டிரைலருக்கு பிரமாண்டமாக செலவு செய்யும் பட்சத்தில் அதற்கு நடிகைகளை அழைத்து வருவதற்கு அதைவிட அதிக செலவு ஆகும். அதைத்தான் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி செய்துள்ளார் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு  நடிகைகளை அழைத்து வந்ததற்காக அவர் எவ்வளவு செலவு செய்துள்ளார் என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு நடிகைகளுக்கும் தனித்தனியாக அவர்கள் வருவதற்கு  கேரவன் என்று அண்ணாச்சி தடபுடலாக நடிகைகளுக்கு பார்த்து பார்த்து செய்து உள்ளார். மேலும் அவர்களுக்கு சம்பளமும் கொடுத்து உள்ளார். அதன்படி பூஜா ஹெக்டே 65 லட்சம், தமன்னா 25 லட்சம், ஹன்சிகா 15 லட்சம், லஷ்மிராய், ஷர்த்தா ஸ்ரீநாத் 10 லட்சம் சம்பளமாக  கொடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர கவர்ச்சி நாயகி யாஷிகா ஆனந்த் 8 லட்சமும் மற்ற நடிகைகளுக்கு தலா 5 லட்சமும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இது மட்டுமல்லாமல் சரவணன் ஐடியில் கோட் சூட் ரூமும் ரெடி செய்து கொடுத்துள்ளார் அந்த ரூமுக்கு ஒருநாள் வாடகை மட்டுமே 40 ஆயிரம் ரூபாய் அப்படிப் பார்க்கையில் மொத்த நடிகைகளுக்கு பல லட்சம் ஆகும் மேலும் அனைவரும் ஓய்வு எடுப்பதற்காக கிட்டதட்ட 30 கேரவன் ஏற்பாடு செய்திருந்தார் இதன் ஒரு நாள் வாடகை மட்டுமே 40,000 இப்படி அண்ணாச்சி நடிகைகளுக்காக காசை அள்ளி வீசியுள்ளார்.