சரவணா ஸ்டோர் உரிமையாளரான சரவணா அருள் அவர்கள் நாயகனாக தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திரையில் அறிமுகமானார் அந்த வகையில் இந்த திரைப்படத்தினை ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர்கள் இணைந்து இயக்கி இருந்தார்கள்.
அது மட்டும் இல்லாமல் தான் நடித்த இந்த திரைப்படத்தினை தானே தன்னுடைய சொந்த தயாரிப்பின் மூலம் தயாரித்து வெளியிட்டு இருந்தார் அதுமட்டுமில்லாமல் தி லெஜெண்ட் ஒரு சயின்ஸ் திரைப்படமாக அமைந்தது மட்டுமில்லாமல் இதில் பல்வேறு பிரபலங்கள் யோகி பாபு விவேக் கோவை சரளா என பலர் நடித்த பெருமை சேர்த்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படம் தான் நடிகர் விவேக்குக்கு கடைசி திரைப்படமாக அமைந்தது என்றே சொல்லலாம் அது மட்டும் இல்லாமல் இந்தத் திரைப்படம் ஆன் இந்தியா மூவியாக ரிலீஸ் செய்யப்பட்டு எதிர்பார்த்த அளவு வெற்றியை கொடுக்கவில்லை இதனால் ஓடிடி தயாரிப்பு நிறுவனங்களும் இந்த திரைப்படத்தை மிக குறைந்த விலைக்கு வாங்கியது.
என்னதான் படம் படுதோல்வி அடைந்தாலும் அடுத்ததாக தான் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கான கதை கேட்பதில் மிக தீவிரமாக உள்ளாராம் அது மட்டும் இல்லாமல் தான் நடிக்க போகும் அடுத்த திரைப்படத்தில் சாக்லேட் பாயாக வருகை காதலிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த திரைப்படம் ரொமான்டிக் ஆக்சன் திரைப்படமாக அமையும் என கூறபடுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தின் லொகேஷன் பார்க்கும் பணியில் இருந்த சரவணன் தற்பொழுது படத்தை முழுக்க முழுக்க வெளிநாட்டில் தான் எடுக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது எப்படியும் இந்த திரைப்படத்தில் அண்ணாச்சி தான் தயாரிப்பாளர் என்பது நன்றாகவே தெரியும்.
அதேபோல ஒவ்வொரு தீபாவளிக்கும் அதிரடி தள்ளுபடி கொடுக்கும் அண்ணாச்சி அவர்கள் இந்த வருட தீபாவளிக்கு தன்னுடைய புதிய திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது இது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இன்னும் பட குழுமங்கள் வெளியிடவில்லை.