விளம்பரப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் திடீரென படத்தில் நடித்துள்ளார் தி லெஜன்ட் என்ற படத்தில் அவர் ஹீரோவாக நடித்துள்ள இந்த படம் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளது இந்த திரைப்படம் பான் இந்தியத் திரைப்படமாக தற்போது உருவாகியுள்ளது.
வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது இந்த படத்தில் அவருடன் இணைந்து ஊர்வசி ரவுதேலா, நாசர், பிரபு, யோகி பாபு, விவேக் என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து அசத்தி உள்ளது. படத்தின் டிரைலர் வேற லெவலில் இருந்து வந்துள்ளது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர் அண்ணாச்சி டாப் நடிகைகளுடன் கெத்தாக வந்து அசத்தினார்.
இந்த ஆடியோ பங்ஷனுக்காக அண்ணாச்சி சுமார் 6.50 கோடி வரை செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அதில் கலந்துகொண்ட நடிகைகளுக்கு மட்டுமே ஒரு கணிசமான தொகை போய்விட்டதாம் குறிப்பாக நடிகை பூஜா ஹெக்டே தமன்னா ஹன்சிகா யாஷிகா என ஒரு மிகப்பெரிய நடிகைகள் கூட்டமே வந்ததாம்.
இந்த நடிகைகளை தங்க வைப்பதற்கு மற்றும் அழகு, சாப்பாடு போன்றவற்றிற்காக மிகப்பெரிய ஒரு தொகை செலவாகி உள்ளதாம். இந்த நடிகைகள் போதாது என கூறி பாலிவுட் பக்கம் திசை திரும்பி அங்கு உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும் கத்ரினா கைஃபை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார்.
அண்ணாச்சி இதற்காக அவருக்கு சுமார் 2.50 கோடி சம்பளம் பேசப்பட்டதாம் மேலும் 2.50 கோடி வாங்கிய கத்ரீனா கைஃப் கடைசி நேரத்தில் அவரால் ஆடியோ பங்ஷனில் கலந்து முடியாமல் போனது. கொடுத்த பணத்தை திருப்பி அனுப்பி விட்டாராம் நடிகை கத்ரினா கைஃப்.