சரவணா ஸ்டோர் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக உள்ளது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகவும் அதிகரித்துள்ளது ஏனெனில் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் தான் என்று சொல்லலாம்.
அது மட்டும் இல்லாமல் படம் வெளியாகுவதை தொடர்ந்து இன்னும் பிரமோஷன் வேலைகளில் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளார் நமது அண்ணாச்சி அந்த வகையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கொடுத்து வந்தார் அப்பொழுது கொடுக்கும் பதில் ஆனது மிகவும் சுவாரசியமாகவும் கூலாகவும் இருந்ததாக தெரியவந்துள்ளது.
அந்த வகையில் பத்திரிக்கையாளர் ஒருவர் 50 வயதுக்கு மேலாக நீங்கள் ஹீரோவாக நடிக்க ஆசைப்படுவது மட்டுமில்லாமல் தற்போது நடித்துள்ளீர்கள். இந்த வயதில் இதெல்லாம் உங்களுக்கு தேவையா என கேள்வி எழுப்பி உள்ளார் இதற்கு நமது அண்ணாச்சி துளி கூட கோபப்படாமல் பதில் கூறியுள்ளார்.
அப்பொழுது அவர் பதில் கொடுத்தது என்னவென்றால் இந்தியில் அமிதாப்பச்சன் இன்று வரை சினிமாவில் நடித்து வருகிறார் அதேபோல தமிழ் சினிமாவிலும் கமல் ரஜினி போன்ற மூத்த நடிகர்கள் இந்த வயதிலும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது என்னிடம் இப்படிப்பட்ட கேள்வியை கேட்கிறீர்கள் இதை நீங்கள் அந்த நடிகர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி என புத்திசாலித்தனமாக பதில் கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் அளித்த பதிலை பார்த்து பல்வேறு ரசிகர்களும் அவரை பாராட்டி வருவது மட்டுமில்லாமல் படம் வெற்றி அடைவதோ தோல்வியடைவதோ அண்ணாச்சிக்கு இரண்டாம் பட்சம் தான் ஆனால் பல சினிமா குடும்பங்கள் என்னால் வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள் இதனால்தான் நான் ஹீரோவாக நடிக்க வந்தது என தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் திரைப்படத்தில் நடிப்பதன் மூலமாக அரசியலில் நுழைய வேண்டும் என்ற ஆசையும் நமது அண்ணாச்சிக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சினிமாவின் மூலமாக என்ட்ரி கொடுத்து அரசியலில் குதிக்க வேண்டும் என்பதுதான் அண்ணாச்சி ஓட குறிக்கோள் என பலரும் கூரி வருகிறார்கள்.