சினிமாவில் சாதிப்பதற்கு அழகு முக்கியம் கிடையாது சிறந்த திறமை இருந்தாலே போதும் என்பதை நினைவில் கொண்டு சினிமாவில் ராவாக களமிறங்கி உள்ளவர்தான் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி. இவ்வாறு பிரபலமான நமது அண்ணாச்சி தான் நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளார்.
இவ்வாறு பிரபலமான இந்த திரைப்படத்திற்கு லெஜெண்ட் என பெயரிட்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் தான் இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாசர் யோகிபாபு போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.
மேலும் இந்த திரைப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் ரசிகர்களின் வரவேற்பை பார்த்து அண்ணாச்சி மிகவும் சந்தோஷமாக இருப்பது மட்டுமில்லாமல் தனது திரைப்படத்திற்கான ஆடியோ விழா சென்னையில் மிக பிரமாண்டமாக நடத்தி உள்ளார்.
இவ்வாறு நடந்த இந்த விழாவில் பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் பல நடிகைகளும் கலந்து கொண்டார்கள் அதில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் தமன்னா ஹன்சிகா பூஜா ஹெக்டே போன்றவர்கள் கலந்து கொண்டது மிகவும் வியக்க தக்க விஷயமாக இருந்தது
அந்தவகையில் இந்த ஆடியோ லான்ச் மட்டும் நடத்துவதற்கு 6.50 கோடி வரை செலவாகி உள்ளதாக தெரியவந்துள்ளது இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகைகள் ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட பணத்தொகை சென்றுள்ளதாகவும் அரசல்புரசலாக விஷயங்கள் வெளிவந்துள்ளன.
மேலும் இந்த நிகழ்ச்சிக்கு பாலிவுட்டில் மிக பிரபலமாக இருக்கும் நடிகை காத்ரீனா கைப்பை கூட அழைப்பு விடுத்ததாக தற்போது ஒரு செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அவருக்கு 3 கோடி வரை பேரம் பேசப் பட்டதாகவும் அதில் முன்தொகை கொடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
ஆனால் நமது நடிகையால் சொன்ன தேதிக்கு சரியாக வர முடியாததன் காரணமாக பணத்தை திருப்பி அனுப்பிவிட்டாராம்.
