தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தற்பொழுது ஜான்சி என்ற வெப் சீரியலில் நடித்துள்ளார் அந்த சீரியலின் ட்ரெய்லர் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது அதாவது நேற்று இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை அஞ்சலி, இயக்குனர் திரு உள்ளிட்ட ஏராளமான பட குழுவினர்கள் கலந்து கொண்டார்கள்.
நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் தான் திரு. இவருடைய இயக்கத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலி வெப் சீரியல் ஒன்றில் நடித்துள்ளார் இவருடன் இணைந்து சாந்தினி, சவுத்ரி, ஆதர்ஷ் பாலகிருஷ்ணா, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.
அதில் இந்த தொடரில் ஜான்சி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நந்தினி தன்னுடைய பழைய நினைவுகளை மறந்து விடுகிறார் எனவே அவருடைய கணவர், குழந்தை யார் என சந்தேகமாக வாழ்ந்து வரும் நிலையில் திடீரென அவருக்கு பழைய நினைவுகள் வருகிறது. அப்பொழுது அவர் யார்? அவரது எதிரிகள் யார். என்பது தெரிய வருகிறது.
அதனை அடுத்து பரபரப்பான சம்பவங்களுடன் இந்த சீரியல் உருவாகி இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தில் நடிகர்கள் கிருஷ்ணா தயாரிப்பில் இன்று முதல் ஹாட் ஸ்டார் ஒடிடித் தளத்தில் வெளியாகிவுள்ளது எனவே இந்த தொடர் நல்ல வரவேற்பினை பெறுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.