அஞ்சலியின் பார்ட்னர் இவரா? வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகைகளில் ஒருவர் அஞ்சலி. இவர் ஆரம்பத்தில் குடும்பமாக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொண்டார்.
அந்தவகையில் இவர் நடித்த படங்களான ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு ,எங்கேயும் எப்போதும் ,மங்காத்தா, தூங்காநகரம், வத்திக்குச்சி, கலகலப்பு ,தரமணி, இறைவி போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.

இதனை தொடர்ந்து அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர தொடங்கினார் அதுமட்டுமல்லாமல் பட வாய்ப்புகளையும் பெற்றிருந்தார். இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து திடீரென விலகினார் இதனையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள் இருப்பினும் அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக படங்களில் நடனமாடி வந்தார்.

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் நாடோடிகள் 2 படத்தில் நடித்து தமிழ் சினிமாவிற்கு மீண்டும் திரும்பி உள்ளார் என்பதை நிரூபித்தார்.தற்பொழுது அவர் தனது கொழுக் மொழுக்குன்னு இருந்த உடம்பை குறைத்து பிட்டாக மாறி உள்ளார். மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதை வெளிப்படுத்தும் விதமாக அவ்வபொழுது வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய புஜத்தை உயர்த்திக் காட்டுவது போல அவரது நாயும் அதற்கேற்றார் போல தலையை அசைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

anjali
anjali