தனது ரசிகர்களை சந்தோஷப்படுத்த க்யூட்டான புகைப்படங்களை அள்ளி விசும் அஞ்சலி.!

anjali
anjali

Anjali cute photos: சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலி. இவர் 2007ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதையடுத்து அவர் தமிழில் பல்வேறு படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள்மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அஞ்சலி ஆரம்பகாலப் படங்களில் குடும்ப குத்துவிளக்காக காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதை உணர்ந்த அஞ்சலி சமீபகாலமாக சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை அதிலும் குறிப்பாக எங்கேயும் எப்பொழுதும், நாடோடிகள் 2, அங்காடி தெரு போன்ற படங்கள் அவருக்கு கைகொடுத்தது. அதுமட்டுமில்லாமல் பெரிய நடிகர்கள் படத்தில் எந்த ஒரு கதையாக இருந்தாலும் தனது மார்க்கெட் உயரும் என்ற எண்ணத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார்.

அஞ்சலி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சினிமாவை விட்டு சிலகாலம் விலகி இருந்தார். இதனையடுத்து தற்போது அவர் நாடோடிகள் 2 மற்றும் (FIR) போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.கொழுக்கு மொழுக்கென்று இருந்த அஞ்சலி அவர்கள் தற்போது உடல் எடையை குறைத்து பள்ளி பெண் போல மாறி உள்ளார்.

சமூகவலைத்தளத்தில்  எப்பொழுதும் ஆக்டிவாகயிருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். அஞ்சலி தனது புகைப்படங்களை சமுகவலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நாய்க்குட்டியுடன் கொஞ்சி கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.

anjali
anjali