தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முறையாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. தான் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதால் தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது. கற்றது தமிழ் திரைப்படத்தை தொடர்ந்து ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, ரெட்டச்சுழி, தூங்காநகரம், மகாராஜா, கருங்காலி, தம்பி வெட்டோத்தி சுந்தரம், கலகலப்பு, என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
என்னதான் இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியவில்லை. இவர் கற்றது தமிழ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். அதேபோல் அங்காடித்தெரு திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றார். இப்படி நடிப்பில் தனது திறமையை நிரூபித்த அஞ்சலிக்கு பெரிய ஹீரோவுடன் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அஞ்சலி இடையில் கவர்ச்சி பொங்க பொங்க அதகளம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இதற்கிடையில் ஜெய்யுடன் காதல் என்ற வதந்தியால் படத்தில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார் அஞ்சலி. அதன் பிறகு தெலுங்கில் மட்டும் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் சமீபகாலமாக அஞ்சலிக்கு உடல் எடை அதிகரித்து கொழுக்கு மொழுக்கு என மாறி விட்டார் அதனால் பட வாய்ப்பு குறைய தொடங்கியது அதனால் தனது உடல் எடையை அதிரடியாகக் குறைக்க ஆரம்பித்தார் உடல் எடையை குறைக்க பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில் யோகா செய்வதில் அஞ்சலி அதிக ஆர்வம் காட்டுவார் அப்படி இருக்கும் வகையில் சமிபத்தில் சமூகவலைதளத்தில் தலைகீழாக தொங்கியபடி செய்யும் யோகா முறையை இவரும் செய்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் வவ்வா போல் தொடங்குகிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.