தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக அறிமுகமானவர் அஞ்சலி இவர் நடித்த முதல் திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பையும் அறிமுகத்தையும் பெற்றுக்கொடுத்தது அதனால் இவரும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கபட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் ஆயுதம் செய்வோம், அங்காடித்தெரு, ரெட்டைசுழி மகிழ்ச்சி, தூங்காநகரம், கோ, மங்காத்தா, என பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இவர் ஒரு கால கட்டத்தில் நடிகர் ஜெய் மீது காதல் வயப்பட்டு பல பத்திரிகைகளில் கிசுகிசு கிளம்பி விட்டது.
ஆனால் இதுகுறித்து ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் மறுத்தார்கள், இந்த நிலையில் கடைசியாக அஞ்சலி நாடோடிகள் 2, நிசப்தம், சைலன்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்பொழுது அஞ்சலி என் கேபி 106, ஆனந்த பைரவி, ஆகிய தெலுங்கு திரைப்படத்தில் நடித்துவருகிறார் அதுமட்டுமில்லாமல் ‘ஓ’ என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படிப் பல திரைப்படங்களில் நடித்து வரும் அஞ்சலி சமீபகாலமாக உடல் எடையை குறைப்பதில் அதிக அக்கறை காட்டி தற்போது உடல் எடையை குறைத்துள்ளார், இந்த நிலையில் சமூக வலைதளங்கள் எப்போது ஆக்டிவாக இருக்கும் அஞ்சலி பச்சை கலர் புடவையில் பார்ப்பதற்கு 18 வயது பருவ மங்கை போல் போஸ் கொடுத்துள்ளார்.
இதொ அந்த புகைப்படம்.