anitha sambath latest news: செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை ஆரம்பித்து தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார் அனிதா சம்பத்.ரசிகர்கள் மத்தியில் தனக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து பல திரைப்படங்களில் வாய்ப்பு தேடி வருகிறார்.
அந்த வகையில் இவர் தளபதி விஜய் அவர்களது நடிப்பில் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும் பல திரைப்படங்களில் செய்தி வாசிப்பாளராகவும் நடித்திருந்தார்.அதுமட்டுமல்லாமல் பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் ரஜினி அவர்களுடன் இணைந்து அவர்களின் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் அனிதா சம்பத்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று அந்த நிகழ்ச்சியில் தனது கணவரை பற்றி பக்கம் பக்கமாக பேசி அனைவரின் கழுத்தை அறுத்தது போல மிகவும் மொக்கையாக பேசியிருப்பார். அதனை அனைவரும் கலாய்த்து இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் தனது கணவரின் பெயர் சொன்ன காரணத்தினால் தனது கணவரின் பெயரை சொல்லாதீங்க ஆரி என்று மிகவும் கோபமாக அதிகளவு சத்தத்துடன் ஆரியிடம் கோபத்தை காட்டினார். அந்த அளவுக்கு தனது கணவர் மீது மிகுந்த காதல் மற்றும் அன்பை வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்வதாக ஒரு வதந்தி சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ஒரு முகநூல் பக்கத்தில் “அனிதா தனது கணவரை விவாகரத்து செய்கிறாரா உண்மை காரணம் இதுதான்” என்ற தலைப்பு ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இதற்கு பதிலளித்த அனிதா சம்பத் அவர்கள் உங்களுக்கு கண்டன்ட் ஏதும் இல்லாத காரணத்தினால் இந்த அளவிற்கு இறங்கி உள்ளார்.நாங்கள் நாள்தோறும் யூடியூப் சேனலில் வீடியோ போடுவது எல்லாம் உங்களுக்கு கண்ணு தெரியலையா என்று கேலியாக பதிவிட்டுள்ளார்.
இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.