சின்னத்திரைக்கு அறிமுகமாகும் அனிதா.! அடுத்த வனிதா இவங்க தான்..

anitha
anitha

சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் தான் நடிகை அனிதா சம்பத். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளிவந்த தர்பார் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சோசியல் மீடியாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார்.

மேலும் பல சர்ச்சைகளை சிக்கிய இவர் மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் கடந்த சீசனை விட இந்த பிக்பாஸ் அல்டிமேட் இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் ஆரம்பித்த அதில் தொடர்ந்து ஏராளமான வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய சிறிய வயது கனவு சமீபத்தில் நிறைவேறி விட்டது என கூறினார். அதாவது சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய உழைப்பினால் சொந்த வீட்டை வாங்கி உள்ளார்.

இதற்கு பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறிய நிலையில் தற்போது இவர் சீரியல்களில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதாவிற்க்கு பிறகு அனிதா சின்னத்திரைக்கு அறிமுகமாக இருக்கிறார் அதுவும் ஹீரோயினின் தோழியாக என்ட்ரி கொடுக்கிறாராம்.

மேலும் இவருடைய பெயரிலேயே இந்த சீரியல் நடிக்க இருக்கிறாராம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதாவினை தொடர்ந்து அனிதா சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோ என மிகவும் பிசியாக இருந்து வருகிறார். எனவே அனிதா சின்ன வயதில் பல கஷ்டங்களை அனுபவித்தார் என கூறி வந்த நிலையில் இதற்கு மேல் மகிழ்ச்சியாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.