களவாணிக்கு தங்கையாக நடிக்க போகும் அனிதா சம்பத்..! இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்..!

anitha-sambath-1
anitha-sambath-1

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் தான் அனிதா சம்பத் இவர் சமீபத்தில் பிரபல ஹீரோ நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க போவதாக வெளிவந்த தகவல் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு பிரபலமான நமது தொகுப்பாளினி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். ஆனால் இவர் இதற்கு முன்பாக பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இருந்தார்.

இவ்வாறு செய்தி வாசிக்கும் போதே பல்வேறு ரசிகர்களை கவர்ந்த நமது தொகுப்பாளினி அடிக்கடி சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கம் இதன் மூலமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்ற அனிதா சம்பத் ரசிகர்களிடையே வெறுப்பையும்  கிண்டல்யுயம் மட்டுமே சம்பாதித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்சியில் கலந்து கொண்டு அனிதா சம்பத் முதல் பரிசை தட்டிச் சென்றது பலரையும் வியக்க வைத்தது. இன் நிலையில் அனிதா சம்பத் புதிதாக நடிக்க இருக்கும் திரைப்படம் பற்றிய தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை உதை புரோடக்சன் மேஜிக் டச் பிக்சர் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாம் மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக  நடிகர் களவாணி விமல் தான் நடிகர் விமல் இவர் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இயக்குனராக மார்ட்டின் நிர்மல் குமார் இயக்க உள்ளார் இத்திரைப்படம் மனித குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதன் காரணமாக இந்த திரைப்படத்தில் விமலுடன் அவருடைய தந்தை பாண்டியராஜன் அவர்களும் நடிக்க உள்ளார்.

vimal-1
vimal-1