தமிழ் திரையுலகில் தனது சினிமா பயணத்தை செய்தி வாசிப்பாளராக ஆரம்பித்து தற்பொழுது நிறைய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் அனிதா சம்பத் இவர் ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக சின்னத்திரையில் பணியாற்றி வந்தார் பின்பு வெள்ளித்திரையில் ஒரு சில திரைப்படங்களை கைப்பற்றி முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவர் செய்தி வாசிப்பாளராக பல திரைப்படங்களில் நடித்து விட்டார்.
மேலும் தற்பொழுது விஜய் டிவி தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் பங்கேற்று தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்.இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற ஷாரிக் உடன் ஜோடி சேர்ந்து நடனம் ஆடி வருகிறார் இதனைப் பார்த்த ஒரு சில நெட்டிசன்கள் தப்பாக இவரை விமர்சித்து வந்தார்கள்.
இருந்தாலும் அனிதா தனது உடன் நெருக்கமாக நடனமாடும் ஷாரிக் தன்னுடைய தம்பி என்று சொன்ன பின்பும் நெட்டிசன்கள் அனிதாவை விடுவதுபோல் தெரியவில்லை தொடர்ந்து அவரை கலாய்த்து கொண்டே வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் அனிதாவின் குடும்பத்திலும் இதனால் சண்டை வருவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன.
இதேபோல் ஏற்கனவே அனிதா தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என ஒரு வதந்தி சமூக வலைதளங்களில் வைரலானது ஆனால் அதனை வதந்தி என நம்ப வைக்கும் வகையில் அனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் இது அனைத்தும் பொய் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் நாங்கள் அனிதாவின் நடனத்தை மிக ஆவலாக பார்த்து வருகிறோம் எந்த ஒரு வதந்திகளையும் நம்ப மாட்டோம் என கூறி வருகிறார்கள்.