நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்த அனிதா சம்பத்.? எந்த படத்தில் தெரியுமா.? வைரல் புகைப்படம் இதோ.

anitha-sampath
anitha-sampath

செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி மக்களிடையே அறிமுகமானவர் அனிதா சம்பத். இவர் பல்வேறு சேனல்களில் தனது பயணத்தை தொடங்கி இருந்தாலும் இவருக்குப் பெயரையும் புகழையும் வாங்கி தந்தது சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்த போது தான்.

மேலும் இவர் பல்வேறு ரசிகர்கள் கூட்டத்தையும் அப்போது சேர்த்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 யில் போட்டியாளராக கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அவரும் அடுத்தகட்டமாக சினிமாவில் தனக்கு வாய்ப்பு கிடைக்க  இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானால் தான் என்பதை அறிந்து இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடினார்.

இருந்தாலும் இவரது கோபம், நடவடிக்கை போன்ற சிலவற்றினால் மக்களிடையே கொஞ்சம் வெறுப்பையும் சம்பாதித்துள்ளார். பின்பு இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் விஜய் தொலைக்காட்சியில் பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சிகளில் ஷாரிக் என்பவருடன் இணையாக கலந்து கொண்டு சிறப்பாக தனது நடனத்தை வெளிப்படுத்தி இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின் பண்ணினார்.

பின்பு தற்போது இவருக்கு பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. மேலும் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனிதா சம்பத் அவரது ரசிகர்களுக்காக பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருவார். இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் அனிதா சம்பத் நடிக்க உள்ளார்.

என்ற தகவல் வெளியாகி உள்ளது அதனை உறுதிப்படுத்தும் விதமாக சிவகார்த்திகேயனுடன் அனிதா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சிவகார்த்திகேயன் முதல்முறையாக தெலுங்கில் நடிக்க உள்ள படத்தில் தான் அனிதா சம்பத் இணைய உள்ளார் என்பது போல் தெரியவருகிறது.

anitha-sampath
anitha-sampath