சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தவர் அனிதா சம்பத் இவர் இதற்கு முன் பல டிவி தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருந்தாலும் சன் டிவியில் பணியாற்றியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டார்.
அனிதாவின் அழகிய முகம் அவர் உச்சரிக்கும் தமிழ் போன்ற அனைத்தும் ரசிகர்களுக்கு பிடித்துப்போக சமூக வலைதளங்களில் அவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் சோஷியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டிங்காக இருந்த அனிதாவிற்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அப்படி அவர் பிக் பாஸ் சீசன் 4 யில் கலந்துகொண்டு விளையாடினார் அனிதாவின் ரசிகர்கள் பலரும் அனிதா சம்பத் பைனல்ஸ் வரை செல்வார் என எதிர்பார்த்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாதியிலே எலிமினேஷனில் வெளியேறினார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில்..
ஷாரிக் உடன் இணைந்து கலந்து கொண்டு முதல் சீசனில் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் பெற்றார். இந்த நிலையில் தற்போது அனிதா சம்பத் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அவரது சமூக வலைதள பக்கத்தில் அந்த வீட்டின் முன் அனிதா சம்பத்.
அவரது கணவர் பிரபா உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு எங்கள் இரண்டு பேருக்கும் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்த கனவு தற்போது நிறைவேறியுள்ளது என மிக நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படம்.