தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டங்களில் கிடுகிடுவென வளர்ந்தார்.
அந்த வகையில் தளபதி விஜய்,விக்ரம், சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, சூர்யா உட்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில் சில காலங்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷ் காமெடி நடிகரான சதீஷை திருமணம் செய்ய உள்ளார் என்ற வதந்தி இணையதளத்தில் வைரல் ஆனது.
இதனைத் தொடர்ந்து தற்போது பிரபல இசையமைப்பாளர் அனிருத்தை காதலித்து வருகிறார் இன்னும் சில காலங்களில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
இந்த வதந்தி உருவாவதற்கு காரணம் இருவரும் கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தால் தான்.
இதனையறிந்த சில சினிமா வட்டாரங்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் அனிருத் இருவரும் காதலிக்கவில்லை இருவரும் திருமணம் செய்துகொள்ள போவதும்வில்லை இது வெறும் வதந்தி மட்டுமே என்று கூறியுள்ளார்கள்.