இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்திற்கு இசை அமைத்து தனது பயணத்தை தொடர்ந்தார். அதன்பின் படங்களுக்கு சிறப்பான இசையை கொடுத்து ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்று இருக்கும் ரஜினி, அஜித், விஜய், கமல், சிவகார்த்திகேயன் போன்ற டாப் நடிகர்கள் படங்களுக்கு இசை அமைத்து.
தன்னை வெகுவிரைவிலேயே முன்னணி இசையமைப்பாளராக மாற்றிக்கொண்டார் இப்போதுகூட பல்வேறு படங்களில் கமிட்டாகி ஓடிக் கொண்டிருக்கிறார் தமிழில் மட்டுமே இசையமைப்பாளராக பயணித்து வரும் இவருக்கு தற்போது மற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் நடிகர் அனிருத் பிரம்மாண்ட படம் ஒன்றிக்கு பாடலைப் பாடி சம்பளமே வாங்காமல் சென்ற சம்பவம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்ற அந்தஸ்தை தன்வசப்படுத்தி இருக்கும் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR.
இந்த திரைப்படத்தில் ராம்சரன், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் மற்றும் பல டாப் நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் இந்த படம் பல்வேறு மொழிகளில் உருவாகி உள்ளது வெகுவிரைவிலேயே வெளியாகவும் ரெடியாக இருக்கிறது இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள நட்பு பாடலை அனிருத் பாடியுள்ளார்.
மொத்தம் ஐந்து மொழிகளிலும் நட்பு பாடலை அனிருத் தான் பாடி உள்ளார் அவர் சொந்த குரலில் பாடி அசத்தியுள்ளார் இந்த பாடல் ராஜமௌலிக்கு ரொம்பவே பிடித்து போனதாம். RRR படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலுக்காக அவர் சுத்தமே சம்பளம் வாங்கவில்லையாம் ஏன் என கேட்டதற்கு ராஜமௌலியிடம் உங்கள் மீதுள்ள அன்பிற்காக தான் செய்கிறேன் இசை, பாடல் என எதற்கும் சம்பளம் வேண்டாம் என ராஜமௌலியிடமே கூறி வாங்க மறுத்து விட்டாராம்.