தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான் இசையமைப்பாளர் அனிருத். இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் தான் இசையமைத்த முதல் திரைப்படத்தின் மூலமாகவே ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்று சொல்லலாம்.
அந்த வகையில் இவருடைய இசை பலரையும் வியக்க வைத்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான கத்தி மற்றும் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் போன்ற திரைப்படத்தில் பணியாற்றியது மட்டும் இல்லாமல் அதன் பிறகு ரஜினியின் பேட்டை சமீபத்தில் கமலின் விக்ரம் என முன்னணி நடிகர்களிடமும் தனது கைவரிசையை காட்டிவிட்டார்.
அதுமட்டுமில்லாமல் தற்பொழுது பல்வேறு முன்னணி நடிகர்களும் அனிருத் இசையமைக்க வேண்டும் என காவல் காத்து வருவது வழக்கமாகி போய்விட்டது அது மட்டும் இல்லாமல் தற்போது அனிருத் அவர்கள் திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருவது மட்டும் இல்லாமல் சில பாடல்களையும் பாடியும் நடித்தும் உள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது அதாவது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த வெளிவந்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் தான் அவர் நடிக்க இருந்தாராம்.
அப்பொழுது இந்த திரைப்படத்தில் யாரை நடிக்க வைப்பது என விக்னேஷ் சிவன் பல்வேறு நடிகர்களின் பெயரை இந்த லிஸ்டில் வைத்துள்ளார் அதில் இசையமைப்பாளர் அனிருத் ஒருவர் ஆனால் அந்த காலகட்டத்தில் அவர் மிகவும் பிசியாக இருந்ததன் காரணமாக இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது.
