தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாறன் திரைப்படம் சுமாரான வெற்றியை பெற்று இருந்தாலும் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் தனது அண்ணன் செல்வராகவனுடன் மீண்டும் இணைந்து நானே ஒருவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து வாத்தி, திருச்சிற்றம்பலம் என பல்வேறு படங்கள் கைவசம் இருக்கிறது. இப்படி சினிமாவில் வெற்றியை ருசித்தாலும், நிஜ வாழ்க்கையில் தனுஷ் பிரச்சனைகளை தற்போது சந்தித்து உள்ளார்.
நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். பத்து வருடங்களுக்கு மேலாக சிறப்பாக ஓடிய இவர்களது திருமண வாழ்க்கை திடீரென சில பிரச்சனைகாரமாக விவாகரத்தை பெற்று பிரிக்கிறோம் என சொல்லிவிட்டு பிரிந்தனர் ஆனால் உண்மையில் கோர்ட்க்கு எல்லாம் இவர்கள் போல வில்லை..
இதனால் இவர்கள் இருவரையும் சேர்த்து வைத்து விடலாம் என ரஜினியின் குடும்பம் எவ்வளவோ முயற்சித்தது ஆனால் அது நடக்கவே இல்லை இந்த நிலையில் தான் நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் இந்த படத்தில் அனிருத் இசையமைத்தார். இருவருக்கும் இடையே நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருந்ததால் மீண்டும் நெருங்கி பழகினர் பின் தனுஷ் இந்த பிரச்சனைகளை எடுத்து சொல்ல அனிருத் இதற்கு இடையே உள்ளே புகுந்து இருவரையும் சேர்த்து வைத்துள்ளார்.
தற்பொழுது ஆரியபுரத்தில் இருக்கும் வீட்டிற்கு தனுஷும் ஐஸ்வர்யாவும் அடிக்கடி போய் வருவதாக தகவல்கள் வெளிவந்தன இருவரும் மீண்டும் இணைய உள்ளதை தனுஷின் பிறந்த நாள் அன்று அறிவித்து விடலாம் என தனுஷும் ஐஸ்வர்யாவும் முடிவு எடுத்துள்ளனர். அதற்கு முன்பாக சென்னையில் உள்ள ஆரியபுரத்தில் இருக்கும் வீட்டிற்கு அடிக்கடி தனுஷம் ஐஸ்வர்யாவும் போய் வந்தனர். இந்த சமயத்தில் மீண்டும் பிரச்சனைகள் பற்றி பேசி மீண்டும் இருவரும் கோபமடைந்துள்ளனர் மேலும் இருவரும் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.