கமலை பற்றி பேசியுடன் கண்கலங்கி போன இசையமைப்பாளர் அனிருத்.! “விக்ரம்” படம் இப்படித்தான் இருக்குமாம்.

vikram-movie
vikram-movie

அண்மைகாலமாக அஜித் விஜய் ரஜினி கமல் போன்ற டாப் நடிகர்கள் பலரும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இளம் இயக்குனர்களுடன் பணியாற்றி வருகின்றனர். மேலும் அந்த படங்கள் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் அமைந்து.

சூப்பர் ஹிட் அடித்து வசூலை வாரிக் குவிக்கின்றன. அந்தவகையில் தற்போது முன்னணி நடிகரான கமலஹாசன் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகின்ற நிலையில் படம் எதிர்பார்த்த அளவு சிறப்பாக உருவாகியுள்ளதாக பலருக்கும் தகவல் தெரிவித்து வருகின்றன.

மேலும் இந்த படத்தில் கமலுடன் இணைந்து முக்கிய நடிகர்களான பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி நடித்து அசத்தியுள்ளனர் அதனால் படத்தில் ஆக்ஷனுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்பது தெரிய வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி நடிகர் சூர்யாவும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது மேலும் விக்ரம் படம் உலகமெங்கும் 5000 திரையரங்குகளிலும் தமிழகத்தில் 1000 திரையரங்குகளிலும் வெளியாகும் என குறிப்பிடப்படுகின்றன.இந்த நிலையில் நேற்று விக்ரம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது அதில் கமலஹாசனுடன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இசையமைப்பாளர் அனிருத்தும் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது விக்ரம் படம் குறித்து பேசிய அனிருத் விக்ரம் படம் எங்களுக்கு மிக ஸ்பெஷலான ஒன்று படத்தில் கமல் சாரின் நடிப்பு பிரம்மிக்கும் வகையில் இருந்தது நான் எமோஷனல் பர்சனல் இல்லை இருந்தாலும் இந்த படத்தை இன்று பார்த்து லோகேஷ் இடம்  சென்று கண்கலங்கி விட்டேன். இந்த படத்தில் பணியாற்றியதை மிஸ் செய்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் எனவும் அனிருத் பேசியுள்ளார்