CSK அணிக்கு “தீம் சாங்” போட மறுத்த அனிருத்.? காரணத்தைக் கேட்டு அதிர்ந்த ரசிகர்கள் தோனி ரசிகர்கள்

csk
csk

ஐபிஎல் சீசன் வருடம் வருடம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஐபிஎல் 16வது சீசன் அண்மையில் தொடங்கி முடிவடைந்தது. இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரிச்சை நடத்தினர். இதில் சென்னையில் கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என சொல்லப்பட்டது வெற்றியை சென்னை அணிக்கு தோனி பெற்று தந்தார்.

வெற்றியைப் பெற்ற பிறகு ஆனந்தத்தில் தோனி அழுததோடு மட்டுமல்லாமல் வெற்றியை தேடி தந்த ஜடேஜாவை தூக்கி வைத்து கொண்டாடினார். இந்த கோப்பையின் மூலம் சென்னை அணி ஐந்து முறை IPL கோப்பையை வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சென்னை அணி அடுத்தடுத்த போட்டிகளிலும் வெற்றியை ருசிக்கும் என கூறப்படுகின்றன.

சென்னை அணியின் மீது ரசிகர்கள் அதிகம் பாசம் வைத்திருக்கின்றனர் பல தீம் சாங் இருக்கின்றது. அதிலும் குறிப்பாக விசில் போடுவது தீம் சாங் 2010 உருவாக்கப்பட்டது. இந்த தீம் சாங் ரசிகர்களுக்கு இன்று வரை பேவரைட்டான தீம் சாங்காக இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒரு தீம் சாங் உருவாக்க அனிருத்துடன் கேட்டுக் கொண்டனர் இதற்காக அவருக்கு ஒரு கோடி சம்பளமும் திட்டமிடப்பட்டது.

ஆனால் அனிருத் நிச்சயம் நான் தீம் சாங் சிஎஸ்கே அணிக்காக செய்ய மாட்டேன் என மறுத்ததோடு மட்டுமல்லாமல் அந்த ஒரு கோடி ரூபாயை திருப்பி கொடுத்துள்ளார் இவர் தீம் சாங் புதிதாக போட மறுத்தது ஏன் என்னவென்றால்..  நான் தோனியின் தீவிர ரசிகன் விசில் போடு தீம் சாங் ரசிகர்களிடையே மிகவும் வைரல் ஆனது அது எனக்கும் பிடித்தது.

அதற்கு நிகராக வேறு எந்த ஒரு தீம் சாங் போட்டாலும் நிற்காது எனக் கூறி மறுத்துள்ளார். இந்த தகவல் சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. அனிருத்தை பாராட்டியும் வருகின்றனர். இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.