நடிகர் தனுஷ் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் இவர்கள் இருவருக்கும் லிங்கா மற்றும் யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். குடும்பம் சினிமா என சிறப்பாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி கடந்த ஜனவரி மாதம் நாங்கள் இருவரும் இனி சேர்ந்து வாழ போவது இல்லை என கூறி பிரிந்தனர்.
இவர்களின் இந்த செய்தி ரஜினி மற்றும் அவரது குடும்பத்தை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. எப்படியாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைத்து விட வேண்டும் என ரஜினி மற்றும் ரஜினி குடும்பம் இவ்வளவோ முயற்சி செய்து பார்த்தது ஆனால் இருவரும் பழைய சண்டைகளை மனதில் வைத்து நாங்கள் சேர்ந்து வாழ மாட்டோம் என கூறினார் இந்த சண்டைக்கு பின்னால் அனிருத் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது காரணம்.
அனிருத் ரஜினியின் இரண்டாவது மகளுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார் இது தனுஷுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அனிருத்தால் தனுஷுக்கும், ஐஸ்வர்யாவும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதை ரஜினியின் குடும்பமும் உணர்ந்து கொண்டது ஒரு கட்டத்தில் அனிருத் மேல் கோபத்தில் இருந்தது போயஸ் கார்டன் பக்கமே அனிருத் வராமல் இருந்தார்.
ரஜினி குடும்பமும் சற்று கண்டு கொள்ளாமலே இருந்தது இப்படி ஓடிக்கொண்டிருந்த நிலையில் அனிருத் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தனுஷும் அனிருத்தும் மீண்டும் நெருங்கி பழகி வந்தனர் அதன் விளைவாக ஒரு கட்டத்தில் அனிருத் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரையும் சந்தித்து பேச வைத்துள்ளார்.
ஒரு வழியாக இந்த பிரச்சனைக்கு அனிருத் முடிவு கட்டினார் தற்பொழுது ஐஸ்வர்யா தனுஷ் அடிக்கடி சென்னை ஆரியபுரத்தில் உள்ள வீட்டிற்கு வந்து போவதாக கூறப்படுகிறது மேலும் ரஜினியின் குடும்ப உறுப்பினர்கள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் சேர்ந்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அனிருத்தால் வந்த பிரச்சனைக்கு அவரே முடிவு கட்டி தற்பொழுது சேர்த்து வைத்துள்ளார். இச்செய்தி தற்பொழுது ரஜினி மற்றும் அவரது குடும்பத்தை சந்தோஷப்படுத்தி உள்ளதாம். மேலும் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இவர்கள் சேர்ந்ததை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என கூறப்படுகிறது.