“நானும் ரௌடி தான்” படத்தில் நயன்தாராவுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்த அனிருத் – முட்டுக்கட்டை போட்ட குடும்பத்தினர்.!

naanum-rowdy-thaan
naanum-rowdy-thaan

சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் பலரும் எடுத்தவுடனேயே டாப் நடிகர் நடிகைகளுக்கு கதை கூறி சிறப்பான படத்தை எடுத்து சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொள்கின்றனர் அந்த வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் சிம்புவை வைத்து போடா போடி என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார்.

இது அவருக்கு முதல் படமாக இருப்பதால் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை. பின்பு அடுத்த சூப்பரான ஒரு கதையை தேர்வு செய்து பல நடிகர் நடிகைகளுக்கு அந்த கதையை கூறியுள்ளார். ஆனால் அந்த கதையில் நடிக்க யாரும் முன் வரவில்லை. பின்பு அந்த படத்தில் விக்னேஷ் சிவனின் நட்பின் காரணமாக இசையமைப்பாளர் அனிருத் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆனால் இந்த செய்தியை அனிருத் குடும்பத்தினரிடம் கூறியபோது அவர்கள் இப்பொழுதுதான் அனிருத் இசையை நன்றாக அமைத்து வருகிறார் அதனால் இந்த நேரத்தில் அவர் ஹீரோவாக நடித்தால் அது நன்றாக இருக்காது என்பதை கருத்தில்கொண்டு அனிருத்  ஹீரோவாக நடிக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.

அதன் பிறகும் பல நடிகர்களுக்கு விக்னேஷ் சிவன் இந்த கதையை கூற ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியும் விக்னேஷ் சிவன் உடன் இருந்த நட்பின் காரணமாக இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படமும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வெற்றி பெற்றது. இந்த படத்தின் மூலம் இணைந்து பணியாற்றியதன் மூலமே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து தற்போது இவர்களது காதல் திருமணத்தில் முடிய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.