விஜயின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு பாட்டுபாடி வாழ்த்து சொன்ன அனிருத் – இணையதளத்தை கலக்கும் வீடியோ.!

aniruth
aniruth

இசையமைப்பாளர் அனிருத் தமிழ் சினிமாவை தன் கண்ட்ரோலில் வைத்து வலம் வருகிறார் ஏனென்றால் சினிமா உலகில் தற்போது நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதற்கு முன்பாக இசையமைப்பாளரை தேர்வு  செய்கின்றனர் அந்த அளவிற்கு இவரது பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் ரசிகர்களை கட்டி இழுத்துப் போட்டு உள்ளது.

அதை நன்கு உணர்ந்து கொண்ட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் முதலில் அனிருத்தை தான் தேடுகின்றனர். யுவன் சங்கர் ராஜா, ஆர் ரகுமான், இளையராஜா, ஹரிஸ் ஜெயராஜ் என மிகப்பெரிய இசையமைப்பாளர்கள் இருக்கும் மத்தியில் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் சூப்பராக இசை அமைத்து.

தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ரசிகர்களுக்கு பிடித்துப்போன இசையமைப்பாளராக அனிருத் விஸ்வரூபம் விடுத்துள்ளார்.இவர் அஜித் விஜய் ரஜினி சிவகார்த்திகேயன் கமல் போன்ற நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூட பல்வேறு புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார்.

இன்று விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் இரண்டாவது போஸ்டரையும் வெளியிட்டு அசத்தியது. இப்படி இருக்கின்ற நிலையில் அனிருத் தளபதி விஜய்யின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  அதுவும்  தளபதிக்காக புதிய பாடல் ஒன்றை அமைத்துள்ளனர்.

நெல்சன், அனிருத், டாக்டர் பட புகழ் ஜான்சரோவ் இணைந்து ஒரு புதிய பாடலை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பாடி அசத்தியுள்ளனர் அந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.