தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் அனிருத் அவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் அனிருத் அவர்கள் தற்போது வரிசையாக முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து வரும் வாய்ப்புகளை தட்டிச் சென்று வருகிறார்.
அந்த வகையில் இசையமைப்பாளர் அனிருத் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இந்த நிலையில் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாத அளவுக்கு இவர் கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார். அப்படி அனிருத் அவர்களுடன் கிசுகிசுவில் சிக்கிய 5 நடிகைகளை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
பிரியா ஆனந்த்:- எதிர்நீச்சல் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை பிரியா ஆனந்த் வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தின் மூலம் அனிருத் அவர்களுடன் பழக ஆரம்பித்தார். அதன் பிறகு இசையமைப்பாளர் அனிருத் அவர்களிடம் தான் வரும் காட்சிகளுக்கு பின்னணி இசை சிறப்பாக அமைக்க வேண்டும் என்று அனிருத்திடம் கேட்டுள்ளார் நடிகை பிரியா ஆனந்த். இதற்காகவே காத்திருந்த அனிருத் சூப்பரான இசையை கொடுத்து அவரை கவர்ந்திருக்கிறார். இப்படி ஆரம்பித்த இவர்களுடைய நெருக்கம் சில ஆண்டுகள் நீடித்தது ஆனால் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.
பூஜா குமார்:- 45 வயது உடைய ஹாலிவுட் திரைப்பட நடிகையான பூஜா குமார அவர்கள் தமிழில் விஸ்வரூபம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை பூஜா குமார். இதற்கு முன்பாகவே அனிருத் அவர்களுக்கும் பூஜா குமார அவர்களுக்கும் தொடர்பு இருந்தது. உறவினர்களாக இருக்கும் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர்.
ஆண்ட்ரியா:- நடிகையும் பாடகியும் ஆக சினிமாவில் திகழ்ந்துவரும் நடிகை ஆண்ட்ரியா அவர்கள் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். மேலும் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது அது மட்டுமல்லாமல் இந்த புகைப்படம் சினிமா வட்டாரத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சில வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.
சுருதிஹாசன் :- ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சுருதிஹாசன் ஏற்கனவே நடிகரை காதலித்து தோல்வி ஆனதால் சோகத்தில் இருந்து வந்தார். அந்த சமயத்தில் அனிருத்துடன் பழகி இருக்கிறார் நட்பாக ஆரம்பித்த அந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாறியது. அந்த வகையில் சில வருடங்கள் நெருக்கமாக இருந்த இவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர்.
கீர்த்தி சுரேஷ்:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் தற்போது தெலுங்கிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக பழகி இருக்கிறார் அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் சேர்ந்து பார்ட்டிகள், ஊர் சுற்றுவது என தங்கள் காதலை வளர்த்து வந்தனர். விரைவில் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய போகிறார்கள் என்று கூறப்பட்டது அந்த அளவிற்கு அவர்களின் நெருக்கம் அதிகரித்தது. ஆனால் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.