தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், சூர்யா, சிம்பு போன்றவர்களுடன் கைகோர்த்து நடித்து பல ஆண்டுகளாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை கைப்பற்றி வைத்திருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. சினிமாவில் சில நடிகர்களுடன் நயன்தாராவுக்கு காதல் கிசுகிசு என பேசப்பட்டு வந்தாலும்..
அதெல்லாம் பிரேக்கப் ஆகி ஒரு கட்டத்தில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நயன்தாரா நடித்து இருந்தார். இந்த படத்தின் மூலம் விக்னேஷ் சிவன் உடன் பழகத் தொடங்கி நட்பாக இருந்த இவர்களது உறவு ஒரு கட்டத்தில் காதலாக மாறி கடந்த 7 வருடங்களுக்கு மேலாக இருவரும் காதலித்து வருகின்றனர்.
மேலும் இவர்கள் இருவரும் இணைந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என பலரும் எதிர்பார்த்து வந்தன இதனையடுத்து சில நாட்களாக இவர்களது திருமண பேச்சு அடிபட்டு வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு வருகின்ற ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ள பத்திரிகை வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் தனியார் விருது விழா நிகழ்ச்சி ஒன்றில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் நயன்தாராவிற்கு இசையமைப்பாளர் அனிருத், ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் கையால் விருதுகள் வழங்கப்பட்டது. அப்போது இசையமைப்பாளர் அனிருத் நயன்தாரா குறித்து பேசியபோது நான் நயன்தாராவை LSS என்று தான் அழைப்பேன் ஏனென்றால் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என்பதால் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் நயன்தாராவை இப்படி செல்லமாக கூப்பிடுவது விக்னேஷ் சிவன் எதுவும் சொல்ல மாட்டாரா என கமெண்டுகளில் குறிப்பிட்டு வருகின்றனர்.