ஹீரோவாக களமிறங்கும் அனிருத் அதுவும் யாருடைய தயாரிப்பில் தெரியுமா.? இயக்குனர் இவரா.?

Anirudh-Ravichander

Anirudh as a hero, whose production is known? Who is the director?: தமிழில் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி என்ற பாடல் உலகெங்கும் பரவியது. இதன்மலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

பின்னர் இதனை தொடர்ந்து எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, இரண்டாம் உலகம், மான்கராத்தே, கத்தி, மாரி, நானும் ரவுடிதான், தங்கமகன், கோலமாவு கோகிலா, பேட்ட, தாராள பிரபு, மாஸ்டர் போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் தற்போது டாக்டர், இந்தியன்2, காத்துவாக்குல ரெண்டு காதல், எஸ் கே 17, சியான் 60 போன்ற பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த இளம் வயதிலேயே பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது இவரின் தனிச்சிறப்பு.

அவ்வப்போது அனிரூத் அவர்கள் கதாநாயகனாக திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்கின்ற வதந்தி வந்த வண்ணமே உள்ளது. வதந்திகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் தனக்கு சினிமாவில் நடிப்பதில் விருப்பமில்லை இசை ஆல்பங்களில் மட்டும் நடிப்பதற்கு ஆர்வம் உள்ளது என பதிலளித்திருந்தார்.

மேலும் இதனைதொடர்ந்து அனிருத் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் “சார் எப்போ ஆனலும் சரி என்ன ஆனாலும் சரி நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் பட தயாரிப்பாளர் நான்தான் நன்றி சார்” என்று அவர் கமெண்ட் செய்திருந்தார்.

மேலும் இந்த இன்ஸ்டாகிராம் பதிவிற்கு பதில் அளிக்கும் விதமாக டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அந்த படத்தை இயக்க ஒரு வாய்ப்பு கேட்டு வைத்திருக்கேன் மனசுல வச்சுக்கோங்க என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தங்களது விருப்பங்களை கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர்.

anirudh-tamil360newz
anirudh-tamil360newz