Anirudh Ravichander: நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார். அப்படி கடைசியாக தமிழில் உதயநிதி உடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவருடைய கேரக்டர் மாமன்னன் படத்தில் பெரிதாக இடம்பெறவில்லை என்றாலும் கொடுத்த கேரக்டரில் கச்சிதமாக நடித்திருந்தார் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டப்பட்டது. இந்த சூழலில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
எனவே இதற்கு தற்பொழுது கீர்த்தி சுரேஷ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இது தவறான செய்தி அனிருத் என்னுடைய நண்பர் என்று கூறி இருக்கிறார். இவர்கள் டேட்டிங் செய்யவில்லை என்றும் இருவரும் உண்மையிலேயே நெருங்கிய உறவில் உள்ளனர். இருப்பினும் இரண்டு பேரும் வெவ்வேறு நபர்களுடன் இருக்கின்றனர் என்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பிரபல கார்ப்பரேட் தயாரிப்பாளரின் மகளுடன் அனிருத் டேட்டிங் செய்வதாக கூறப்படுகிறது. எனவே அந்த தயாரிப்பாளரின் மகளுடன் தான் அனிருத் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறாராம். இவரை எடுத்து மறுபுறம் கீர்த்தி சுரேஷ் சினிமா துறையில் இல்லாத ஒருவரை பார்க்கிறாராம். அவர் தந்தை ஜி சுரேஷ் குமாரால் அறிமுகமான அந்த நபர் பிரபல இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார்.
இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை இதுவரையிலும் இவர்கள் கூறவில்லை. மேலும் இது குடும்பத்தினர்கள் பார்த்து வைத்தது என்பதனால் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்காக நேரம் கொடுத்திருக்கிறார்களாம். இவ்வாறு அனிருத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ் நல்ல நண்பர்கள் என கூறப்படுகிறது.
இந்த வதந்திக்கு கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றாலும் அனிருத் இது வதந்திகள் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பகிர்ந்துள்ளார். இவை முற்றிலும் ஆதாரம் அற்றவை மற்றும் தனிமையில் தான் இருந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.