சினிமாவில் பொதுவாக பல நடிகர் மற்றும் நடிகைகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பிறகு நடிகர் மற்றும் நடிகைகளாக நடித்து வருகிறார்கள். அந்த லிஸ்டில் கமல், ஷாலினி, சிம்பு என பல நடிகர் நடிகைகளை கூறிக்கொண்டே போகலாம்.
இந்த லிஸ்டில் இணைந்தவர் தான் அனிகா சுரேந்திரன் இவர் அஜித் கௌதம் மேனன் கூட்டணியில் வெளியாகிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் அனிகா சுரேந்திரன் அறிமுகமானார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் மூலம் அனிகா சுரேந்திரன் ரசிகர்களின் உள்ளங்களை வென்றார்.
மேலும் பல ரசிகர்கள் அஜித்தின் மகளாகவே பார்க்க ஆரம்பித்தார்கள் அந்த அளவு இவர் பிரபலம் அடைந்து விட்டார் மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மிருதன், குயின், விசுவாசம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். விசுவாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித் நயன்தாராவுக்கு மகளாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.
மேலும் இவரது மார்க்கெட் அதிகரித்து விட்டது அதனால் இவரை ஏதாவது ஒரு திரைப்படத்தில் புக் செய்து வருகிறார்கள் இயக்குனர்கள் அந்தவகையில் மலையாளத்தில் புதிய திரைப் படத்திலும் தற்போது நடித்து வருகிறார். விரைவில் இவர் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது அதற்கான அடுத்த கட்ட பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அனிகா சுரேந்திரன் ரசிகர்களை வெகுவாக கவரும் வகையில் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிடுவது வழக்கம் அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குட்டி நயன்தாரா என அன்போடு அழைத்தார்கள்.
இந்த நிலையில் மீண்டும் குட்டி நயன்தாரா போல் புடவையில் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.