முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் கருப்பு நிற உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அனிகா சுரேந்திரன்.! வைரலாகும் புகைப்படம்

anikha
anikha

சினிமா உலகுக்கு முதன் முதலாக மலையாள சினிமா மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அணிகா சுரேந்தர் இவர்  குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் கௌதமேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் அனிகா சுரேந்தர் அவர்களுக்கு பேரும் புகழும் பெற்று கொடுத்தது அது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று கொடுத்தது. இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அணிகா சுரேந்திரன் மீண்டும் விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது இந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அனிகா சுரேந்திரன் அவர்களை அஜித்தின் மகளாகவே பார்க்க ஆரம்பித்தார்கள். அதனால் அணிகா சுரேந்தர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள். குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து வந்த அனிகா சுரேந்திரன் தற்போது நாயகியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

பொதுவாக சினிமாவில் நடிகைகளுக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டால் சமூக வலைகளத்தில் போட்டோ சூட்  நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்கள் அது மட்டும் இல்லாமல் கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தக்க வைத்துக் கொள்வார்கள் அந்த வகையில் பல நடிகைகள் இந்த யுக்தியை  கடைபிடித்து வருகிறார்கள்.

anikha
anikha

அப்படிதான் நடிகை அணிகா சுரேந்திரன் அவர்களும் முன்னணி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை கிடைத்தாலும் ஒரு சில புகைப்படம் கவர்ச்சிகரமான புகைப்படத்தை வெளியிட்டு வருவதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு அறிவுரை கூறி வருகிறார்கள்.

anikha
anikha

அந்த வகையில் தற்பொழுது கருப்பு நிற உடையில் ஒய்யாரமாக அமர்ந்தபடி சில புகைப்படங்கள் தற்பொழுது வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் முன்னணி ஹீரோயினுக்கே  டப் கொடுக்கும் வகையில் அட்டகாசமாக இருக்கிறீர் என கமெண்ட் செய்துள்ளார்கள் ரசிகர்கள்.

anikha surendar
anikha surendar