சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஆரம்ப காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்பை பெற்று முன்னணி நடிகையாக வளம் வருகிறார்கள் அந்த வகையில் கமலஹாசன், ஷாலினி என பல நடிகர் மற்றும் நடிகைகள் கூறிக்கொண்டே போகலாம். அதேபோல் குழந்தை நட்சத்திரமாக நடித்த பலரும் பெரிய நடிகராக வந்துவிட முடியாது திறமை இருந்தால் மட்டுமே அடுத்த கட்டத்தை தொட முடியும்.
குழந்தை நட்சத்திரமாக நடித்த அனைவரையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் ஒருசிலரை மட்டும் ரசிகர்கள் மறக்கவும் மாட்டார்கள் அந்த வகையில் பேபி ஷாலினி, மீனாவின் மகள் நைனிகா என பல குழந்தை நட்சத்திரங்களை ரசிகர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த லிஸ்டில் தமிழ் திரைப்படங்களில் மாபெரும் வெற்றி பெற்ற என்னை அறிந்தால் திரைப்படம் மற்றும் விசுவாசம் ஆகிய திரைப்படங்களில் தல அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா சுரேந்திரன்.
அணிகாவை இதுவரை ரசிகர்கள் பலரும் அஜித்தின் மகளாகவே பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் அந்த அளவு அஜித் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. இவர் சினிமாவில் முதன் முதலாக 2010ஆம் ஆண்டில் வெளியான கதை திருடனும் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்தார்.
தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் அதே போல் மலையாளத்திலும் இவர் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். விசுவாசம் திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்தவர் தற்போது வளர்ந்து நயன்தாரா போலவே மாறிவிட்டார். தற்பொழுது பல முன்னணி நடிகைகளை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.
அதைப் பார்த்த பலரும் இவர்தான் குட்டி நயன்தாரா என புகழ்ந்து தள்ளினார்கள். அப்படி இளம்வயதிலேயே பலவிதமான போட்டோசூட் களை நடத்தி வெற்றி கண்ட அனிகா சுரேந்திரன் அவர்களுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளது மலையாளத்தில் வெளியான கப்பேலா என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கான புட்ட பொம்மா படத்தில் அணிகா ஹீரோயினாக நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.