தன்னுடைய 18 ஆவது பிறந்த நாளை கோலகாலமாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன்.! இங்கேயும் மார்டன் உடை தானா புலம்பும் ரசிகர்கள்…

anikha-surendar
anikha-surendar

தமிழ் சினிமாவில் எத்தனையோ குழந்தை நட்சத்திரங்கள் இருந்தாலும் ஒரு சில குழந்தை நட்சத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்க இடத்தை பிடித்து விடுகிறார்கள் அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு மிக எளிதாக கிடைத்து விடுகிறது. அந்த வகையில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் அனிகா சுரேந்திரன்.

இவர் தமிழில் 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகிய என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் அஜித்தின் மகளாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர் மனதில் நீங்க இடத்தை பிடித்தார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு பிறகு அனிகா சுரேந்திரன் அவர்களை அஜித்தின் மகளாக ரசிகர்கள் பலரும் பார்த்தார்கள்.

இதனை தொடர்ந்து பாஸ்கர் தி ராஸ்கல், நானும் ரவுடிதான், மிருதன் என பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார் பின்பு மீண்டும் 2019 ஆம் ஆண்டு அஜித் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகிய விஸ்வாசம் என்ற திரைப்படத்தில் அஜித் மற்றும் நயந்தாராவுக்கு மகளாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் அப்பா மகள் பாசம் அதிகமாக பேசப்பட்டதால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது.

anikha
anikha

மேலும் அனிகா சுரேந்திரன் அவர்களுக்கு விஸ்வாசம் திரைப்படத்தை தொடர்ந்து மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் அணிக்கா சுரேந்திரன் நடித்து வருகிறார் மேலும் ஹீரோயினாக ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் விரைவில் இவர் ஹீரோயினாக திரையில் தோன்றுவார்.

anikha
anikha

இந்த நிலையில் அணிகா சுரேந்திரன் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்த நிலையில் தற்பொழுது 18 வயது ஆகியுள்ளதால் தன்னுடைய 18 வது பிறந்த நாளை கோலகாலமாக கொண்டாடி உள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

anikha
anikha