ஹீரோயின் அவதாரம் எடுக்கும் குட்டி நயன்தாரா அணிகா.! முதல்படமே வேற லெவல்..

anikha6
anikha6

anikha acted as a heroine: நடிகை அனுஷ்கா சுரேந்தர் தற்போது ஹீரோயினாக களமிறங்கியிருக்கிறார். நடிகை அனிகா சுரேந்திரன் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் என்ற திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து பிரபலமடைந்தவர், அதன் பிறகு குயின் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமடந்தார்.

அதுமட்டுமில்லாமல் மீண்டும் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்தார்.  இவரின் நடிப்பு திறமையை ரசிகர்கள் பலரும் ரசித்தார்கள்.

இதனாலேயே அனிகா சுரேந்திரன் எப்படியாவது ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்ற குறிக்கோளுடன் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்,  இவரின் இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் குட்டி நயன்தாரா என பெயர் வைத்தார்கள்.

அந்தப் பெயர் இவறுக்கு பொருத்தமாக இருந்தது எனவும் கருத்து தெரிவித்தார்கள்,  இந்த நிலையில் இவர் ஹீரோயினாக அவதாரம் எடுத்துள்ளார்,தெலுங்கில் முதன் மறையாக ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

மலையாளத்தில் ஹிட் அடித்த கப்பேலா அன்னபெண் என்ற திரைப்படத்தை முகமது முஸ்தபா இயக்கியிருந்தார், இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள். தெலுங்கிலும் முகமது முஸ்தபா கான் படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த படத்தில் அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதனால் விரைவில் அனிகா சுரேந்திரன்னை ஹீரோயினாக திரையில் காணப்போகிறோம்.