ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் புதிய படத்தில் அனிகா சுரேந்தர் – எந்த மாதிரியான ரோல் தெரியுமா.? இதோ அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு..

anikha-
anikha-

தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனர்கள் அதிகம் படை எடுத்து வருகின்றனர் அதில் ஒரு சிலர் நல்ல படங்களை ஆரம்பத்திலேயே கொடுப்பார்கள் அந்த வகையில் இயக்குனர் கார்த்தி முதலில் நெஞ்சமுண்டு நேர்மை உண்டு என்ற படத்தை இயக்கி வெற்றி கண்டார். இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருந்தார்.

ஹீரோவாக ரியோ ராஜ் நடித்தார் அவருடன் கைகோர்த்து ஆர் ஜே விக்னேஷ் காந்த், shirin kanchwala, நாஞ்சில் சம்பத், விவேக், பிரசன்னா, ராதாரவி, மயில்சாமி, பிஜிலி ரமேஷ், ராஜ்மோகன், விக்னேஷ் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்த திரைப்படம் ஒரு சமூக அக்கறை உள்ள கருத்தை எடுத்துரைதிருந்தது.

படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி அடுத்ததாக வேல்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து ஒரு புதிய திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்பாப் ஆதி ஹீரோவாக நடிக்கிறார்.  மேலும் தென்னிந்திய சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாகவும், ஹீரோயின் ஆகவும் ஒன்னு ரெண்டு படங்களில் நடித்து ஓடிக் கொண்டு இருப்பவர் நடிகை அனிகா..

சுரேந்தர். இவர் இந்த திரைப்படத்தில் ஒரு பள்ளி மாணவியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கிசுகிசுக்க படுகிறது.  இவர்களுடன் இணைந்து காமெடி நடிகர் முனிஷ்காந்த் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் நடிகர் ஹிப் ஹாப் ஆதிக்கு 7 வது திரைப்படம் இதனை படகுழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஒடு ராஜா படம் போலவே.. நீங்கள் எடுக்கும் இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றியை பதிவு செய்யும் எனக் கூறி படகுழுவுக்கு இப்போவே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.