மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாட்களில் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் உடன் ஜோடி போட்டு நடித்தால் தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக மாறி உள்ளவர் அனிகா சுரேந்திரன்.
இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் அதிரிபுதிரி ஹிட் அடிப்பதால் தற்போது அசுர வளர்ச்சியை சினிமா உலகில் எட்டியுள்ளார் மேலும் இவரை பின்தொடர்வோர் எண்ணிக்கையும் தற்போது லட்சக்கணக்கில் குவிந்த வண்ணமே இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நட்சத்திரமாக இருக்கும் அஜித்தின் படங்களில் இவர் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தினார் அனிகா இதனால் மக்கள் இவரை கவனிக்கத் தொடங்கினர் அது போல இயக்குனர்களும் தற்போது கவனித்து வந்த நிலையில் பட வாய்ப்புகளை தற்போது அள்ளிக் கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் மலையாளத்தில் ஒரு புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து விளம்பர படங்களிலும் நடிக்க தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் தற்போது இந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அமிதாப்பச்சனுடன் இணைந்து ஒரு புதிய விளம்பர படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
அமிதாப்பச்சனுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் இருந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகியது.
இந்த நிலையில் அனிகா இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் சேதுபதியுடன் இணைந்து அவர் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.